சுருளிப்பட்டி தசரிவார் சங்கம்

Surulipatti dasarivar

நமது நோக்கம்

சுருளிப்பட்டி தசரிவார் சங்கத்தின் நோக்கம் என்பது ஆன்மிகமும் சமுதாய மக்களின் வளர்ச்சியும் கலந்தது.

ஒவ்வொரு வருடமும் நமது சமூக பெரியவர்களால், மாசி பச்சை பாதயாத்திரை முதல் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி ஊக்குவிப்பது வரை பல சிறப்பான செயல்பாடுகள் முன்னெடுத்து செயல் படுத்தப்படுகிறது

நமது குலம்

தசரிவார் சமூக பிரிவு ஒக்கலிகர் காப்பிலிய சமூகத்தின் 48 பிரிவுகளில் ஒரு சமூக பிரிவாகும். நமது சமூக மக்கள் கர்நாடக, ஆந்திர தெலுங்கானா போன்ற பகுதிகளில் இருந்தாலும் தமிழகத்தில் தேனி மதுரை திண்டுக்கல் பகுதிகளில் அதிகளவு வசிக்கின்றனர்.

தமிழகத்தில் பாளையக்காரர்கள் ஆட்சி முறையில் நமது தசரிவார் குல பெரியவர்கள் தலைமையேற்று ஒக்கலிக சமூக மக்களை குடியமர்த்தி காடுகளை விளைநிலங்களாக மாற்றி கம்பம் பள்ளத்தாக்கில் சிறப்பான ஆட்சி செய்து பிற்காலத்தில் வெள்ளையர்களால் பட்டத்து ஜமீன்தார்கள் என்று அழைக்கப்பட்டதால் நமது குலத்திற்கு ஜமீன்தார் குலம், துரை மக்கள் என்றும் மக்கள் அழைப்பதுண்டு. பாளையக்காரர் முறையில் கம்பம் பள்ளத்தாக்கில் பஞ்சகாலங்களில் எண்ணற்ற குளங்களை வெட்டி, பரவு காவல் நிறுவி மக்களை பாதுகாத்தனர்.

நமது குலதெய்வமாக அருள்மிகு ஜக்காலம்மானும் மாலை கோவில் வழிபாடு தெய்வமாக அருள்மிகு சிக்கஜ்ஜி அம்மனும் அருள் செய்கிறார்கள். இஷ்ட தெய்வமாக ரெங்கநாதர் வழிபாடு பரவலாக உள்ளது.
நமது குலதெய்வ கோவில் கோம்பையில் அமைந்திருந்தாலும் இறைவன் அருளோடு பிடிமண் கொண்டு சுருளிப்பாட்டியில் அருள்மிகு சிக்கஜ்ஜி அம்மன் – அருள்மிகு ஜக்காலம்மன் மாலை கோவில் எழுப்பி தொடர்ந்து தை திங்கள் வழிபட்டு வருகின்றோம்.

தொடர்பு கொள்ளவும்

நமது சமுதாய நிகழ்ச்சி பற்றி விவரம் அறிய சுருளிப்பட்டி தசரிவார் சங்க தலைவர் மணிகண்டன் +91 97863 92348 எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.